இத்தாலி பலெர்மோ வாழ் தமிழ்மக்கள் வழங்கிய தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்

இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 24/12/2025 அன்று இத்தாலிநாட்டின் பலர்மோவில் உள்ள தாயக தமிழ் உறவுகளின் பேராதரவோடு மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு அரிசி, மா, பருப்பு, சோயா,கடலை, சீனி, தேயிலை,சவர்க்காரம் மற்றும் பனடோல் என்பன அடங்கிய உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இவ் உலருணவுப் பொதிகளை வழங்கிய இத்தாலி நாட்டின் பலர்மோ வாழ் தாயக தமிழ் உறவுகளுக்கு மன்னார் மக்கள் தங்கள் மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

About The Author

உங்கள் கவனத்திற்கு