இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026
தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது 16/05/2026 சனிக்கிழமை இத்தாலி ரெச்சியோ எமிலியாவில் Piazza della Vittoria, என்னும் இடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால் பற்றிய விளக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு,இத்தாலிய, தமிழீழதேசியக் கொடிகள் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப் பட்டத்தைத் தொடர்ந்து அனைத்து மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவராலும் மலர்வணக்கம், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது. வாழிட மக்களுக்கான தமிழின அழிப்பு நாள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களாலும் இளையோர்களாலும் வழங்கப்பட்டதுடன் அது பற்றிய விளக்கங்களும் எடுத்துக் கூறப்பட்டது. அதேநேரம் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் பேச்சு, கவிதைகள் இடம்பெற்றன. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இறுதியாக தேசியக் கொடிகள் கையேந்தல் இடம்பெற்று “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் “ என்ற பாடல் இசைக்கப்பட்டு , உறுதி மொழி எடுக்கப்பட்டு இந் நிகழ்வானது நிறைவுபெற்றது .




















