இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ/ மணிவண்ணன் உட்பட தற்பொழுது எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வானது 31.05.2026 அனைத்துலக ரீதியில் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக இத்தாலி
பலெர்மோ நகரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து தேசியக்கொடியேற்றி மாவீரர் பொதுப் படத்துக்கான பிரதான ஈகைச்சுடரேற்றலுடன் 25 மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து
தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீர வரலாற்றுப் பதிவுகள் இடம் பெற்றது .
அதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்களிற்கு தேசியக்கொடி, திருவுருவப் படம் கையளிக்கப்பட்டு தேசியக்கொடி கையேற்கப்பட்டதை
தொடர்ந்து இன்றைய நாளில் வீரவணக்கம் செய்யப்பட்ட மாவீரர்கள் மற்றும் அனைத்து மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்து எமது தாரக மந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக நிறைவு பெற்றது.























































