இத்தாலி ஜெனோவாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026
2009ல் முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நடந்தேறி 17 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையிலும் இன்று வரை சர்வதேசம் மௌனமாக இருக்கிறது.
எம் உறவுகளுக்கு நீதி கேட்டு ஜெனோவா பிரதேசத்தில் (17/05/2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 15:00 மணிக்கு PALAZZO SAN GIORGIO (VICINO ACQUARIO) எனும் இடத்தில் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்று கூடிய கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.இத்தாலிய மக்களுக்கு தமிழின அழிப்பு நாள் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் இளையோர்களாலும், திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களாலும் வழங்கப்பட்டதுடன் அது குறித்த விளக்கங்களும் எடுத்துக் கூறப்பட்டது.





















