தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு ஜெனோவா, பியல்லா திலீபன் தமிழ்ச்சோலைகளில் இடம்பெற்ற அடையாளம் காப்போம் சிறப்பு கருத்தூட்டலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும்.

ஜெனோவா, பியல்லா. திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு “அடையாளம் காப்போம்” பிரத்தியேகச் சிறப்பு கருத்தூட்டல்கள் இடம்பெற்றது .தொடர்ந்து சிறிலங்கா அரசு கொத்துக் கொத்தாக கொன்று குவித்த வேளையில் அவலக் குரல் ஒலித்த போதும் சர்வதேசம் பாராமுகமாக இருந்தன, எம் உறவுகள் பட்டினியில் வாடியிருந்த வலி சுமந்த நாளில் தமிழீழ அரசு தனது இறுதியாக கைவசம் இருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு கஞ்சி வழங்கி உயிர்காப்பு பணியை மேற்கொண்டது. கஞ்சி தான் அருமருந்தாய் இருந்தது என்ற இத்தகவலை வலி சுமந்த இந்த நாளில் நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி மாணவர்கள், பணியாளர்கள் , பெற்றோர்கள், பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜெனோவா

பியல்லா

About The Author

உங்கள் கவனத்திற்கு