வட்டுக்கோட்டை தீர்மானமும், தமிழீழ ஆணையும் -அகவை 50

அன்பார்ந்த இத்தாலி வாழ் தமிழீழ மக்களே………..! ஆண்டாண்டு காலமாக தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் சுய நிர்ணயம்,இறையாண்மை,தாயகத்தை மீட்டெடுக்க சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுடன் பல முறை அகிம்சைவழியில் போராடி அவர்களால் ஏமாற்றப்பட்டு,எமது நியாயமான கோரிக்கைகள் அடக்கப்பட்டு,உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டது வரலாற்று உண்மையே. இந்த நிலையில் எம்மை நாமே ஆளவேண்டும் என்ற வேணாவில் உருவானதே 14.05.1976 ல் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” இத்தீர்மானம் அன்று ஈழத்தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளாலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ள பட்டு நிறைவேற்றப்பட்டது இத்தீர்மானத்திற்கமையஇத் தீர்மானத்ற்கு அமைய “தமிழீழ மக்கள்”1977ல் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அதன் அரசியல் அபிலாசைகளான தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் மற்றும் ஐனநாயக அரசியல் விருப்பின் ஆணையாக தாம் இறையாண்மை கொண்ட ஓர் தேசிய இனம் என்ற அடிப்படையில் பிரிந்து அரசாள்வதே தமது விருப்பு என சிங்கள பேரினவாதிகளுக்கும்,சர்வதேசத்திற்கும் தமது வாக்குரிமையால் ஆணையிட்டனர். மக்கள் ஆணை வழங்கியும் சிங்கள ஏகாதிபத்தியம் அதை ஏற்றுக்கொள்ளாமல் எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை இப்பவரை மேற்கொள்கின்றது.ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் அதன் அடிப்படை கோரிக்கைகளும்,கொள்கைகளுமே தமிழீழ விடுதலைப் பாதையின் அடிநாதமாகவும்,அடித்தளமாகவும் இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. எனவே தாயகம் ,தேசியம்,சுயநிர்ணய உரிமை என்ற தமிழீழ கோட்பாட்டுக்கமைய எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலும்,எமது மாவீரர்களின் கொள்கைப்பற்றும் எம்முடன் இருக்கும் வரை நாம் தமிழீழ அரசை அடைவோம் என்ற உறுதியெடுத்து இப்பொன்விழாவில் அரசியல் விடுதலை நோக்கி நகர்வோம். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “

About The Author

உங்கள் கவனத்திற்கு