இத்தாலி பலெர்மோவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2026

சிங்கள பேரினவாத அரசினாலும் வல்லாதிக்க சக்திகளாலும் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு நாள் மே 18. இந்நாளை தமிழினம் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது .எமது மக்கள் இதே நாளில் தான் சிங்கள பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டார்கள். ஆகவே இந்நாளை நினைவு கூரவும் சர்வதேசத்துக்கு மீண்டும் ஒருமுறை நமக்கு நடைபெற்ற இன அழிப்பை பறைசாற்றவும் பலெர்மோ வாழ் தமிழ் உறவுகள்,திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், இளையோர் அமைப்பினர், தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள், இத்தாலிய பிரமுகர்கள், ஒன்று கூடி பலர்மோ மாநகர சபையின் அனுசரணையுடன் முள்ளிவாய்க்கால் நினைவாக மரம் நடப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் நடைபெற்றது.

About The Author

உங்கள் கவனத்திற்கு