இத்தாலி பலெர்மோவில் மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு

பாசறைப்பாணர், “மாமனிதர் “தேனிசை செல்லப்பா தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு தன் குரலால் உரம் மூட்டிய ஒரு கலைப் போராளி . தமிழ்நாடு சிங்கிலிபட்டி என்ற கிராமத்தில் பிறந்து மக்கள் குரல் இசையால் கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடி வந்த இவர் மூத்த உறுப்பினர் திரு பேபி சுப்பிரமணியம் தொடர்பாடல் மூலம் எமது தலைவரை சந்திக்கிறார் அந்நாளில் இருந்து நம் தலைவர் மீது பேரன்பையும் மதிப்பையும் ஈட்டுகின்றார் .அதன் பின்பு எமது தலைவரின் அழைப்பை ஏற்று 1990 ஆம் ஆண்டு தமிழ் ஈழத்திற்கு வருகை தந்து பல இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் “தங்கத்தமிழும் தமிழீழ மண்ணும் எனது இரு விழிகள்” என்று பாடினார் .

அன்று எமது தலைவரால் பாசறைப் பாணர் என அழைக்கப்பட்டார் இப்படி பல ஆயிரக்கணக்கான பாடல்கள் நிலம் சார்ந்து, ஊர்கள் சார்ந்து, மாவீரர்கள் சார்ந்து, போராளிகள் சார்ந்து, எம் தலைவன் சார்ந்து பாடியுள்ளார். எம்மக்களையும் ,மண்ணையும் ,தலைவரையும் நேசித்து தனது காந்த குரலால் இன உணர்வை ஊட்டி இன்று 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் சாவடைந்த மாமனிதர் பாசறைப்பணர் தேனிசை செல்லப்பா அவர்களுடைய வீரவணக்க நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பலெர்மோவில் 03-05-2026 மாலை 7 மணி அளவில் நடைபெற்றது அதன் சில பதிவுகள்

About The Author

உங்கள் கவனத்திற்கு