இத்தாலி ரெச்சியோ எமிலியா நகரில் நடைபெற்ற ஆசிரியர் செயலமர்வு 2025

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கும் அனைத்துப் பிரதேச திலீபன் தமிழ்ச்சோலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வானது, ஞாயிற்றுக்கிழமை 02/11/2025 அன்று ரெச்சியோ எமிலியா நகரில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வைத் தொடர்ந்து ஆரம்பமாகியது.

ஆசிரியர்களுக்கான செயலமர்வில் அனைத்துத் திலீபன் தமிழ்ச்சோலையிலிருந்தும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இச்செயலமர்வினை ஆசிரியர்களான திருமதி நளாயினி ரவிகுமார் மற்றும் திருமதி சர்மினி கவிதாசன் ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர். செயலமர்வில் ஆசிரியர்களின் வாண்மையை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் தாய்மொழிக்கல்வியில் மாணவர் நிலை சார்ந்த கற்பித்தல் , கற்பித்தல் அணுகுமுறைகளும் உத்திகளும் , கற்பித்தலைத் திட்டமிடல், சிறப்புக் கற்றல் தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல், விளையாட்டு முறைக் கற்பித்தல், போன்ற இன்னும் பல முதன்மையான விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டன.

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட இச்செயலமர்வானது ஆசிரியர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தது .

இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையாலும், திலீபன் தமிழ்ச்சோலைகளாலும் தாயகத்தில் எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பான தரவுகளும் நிகழ்வின் இறுதியில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About The Author

உங்கள் கவனத்திற்கு