இத்தாலி பியல்லா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 38 ஆவது ஆண்டு மற்றும் தமிழீழ வான் படையின் சிறப்பு தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

“உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச்செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்” என்று குறிச்சென்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 38வது ஆண்டும் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (28/09/2025) மாலை 17.30 மணிக்கு கலாச்சார மண்டபத்தில் பொதுச் சுடர் ஏற்றலுடன் வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது .

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களினதும். கேணல் சங்கர் அவர்களினதும் நினைவுப்பகிர்வினை ஆசிரியர்கள் வாசித்ததைத் தொடர்ந்து இளையோர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு வரலாற்று வகுப்பும் நடைபெற்றதைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதை, பேச்சு என்பனவும் இடம்பெற்று , இறுதியில் ‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”என்ற எமது தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

About The Author

உங்கள் கவனத்திற்கு