தாய் மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. தாய் மொழி தினம் வருடா வருடம் மாசி மாதம் 21ம் திகதி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. தாய்மொழியைக் காப்பதற்காக இந்த உலகமெங்கும் பல புரட்சிகள் தோன்றியிருக்கின்றன. எமது தாய்மொழியான
தமிழ் மொழி என்பது வெறுமனே மொழி அன்றி அது நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்ற உணர்வாக விளங்குகின்றது.


அந்த வகையில் தாய்மொழி தினம் 03/03/2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து பாடசாலைக் கீதம், தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. மாணவர்களால் எமது மொழியாம் தமிழின் சிறப்புக்களைத் தமிழ் மொழியிலும், வாழிட மொழியிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்களின் கவிதை, பேச்சு, நடனம், என்பனவும் இடம்பெற்றது. இறுதியில் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி இடம்பெற்று நிகழ்ச்சிகள் இனிதே நிறைவடைந்தது.

About The Author

உங்கள் கவனத்திற்கு